July 24

1 week ago

Morning Light

Morning Light - Psalm 143:8

Verse of the Day

Revelation 18:4 – Come out of her, my people, that ye be not partakers of her sins, and that ye receive not of her plagues.

The First Judgment of Israel

As the noise of celebration rose from the camp, Moses came down the mountain carrying the stone tablets, written by the very finger of God. But what he saw broke his heart; and broke the tablets too. There, in plain sight, was the golden calf, and the people dancing around it. Idolatry had already taken root. In righteous anger, Moses burned the idol in the fire, ground it into powder, and scattered it on the water. Then he made the people drink it. Yes, he made them taste the shame they had chosen – what they worshipped turned to bitterness inside them. It was a physical reminder: sin might glitter like gold, but in the end, it is bitter and humiliating.

Then Moses stood at the gate of the camp and cried out: “Whoever is on the LORD’s side; come to me!” And the sons of Levi gathered to him. They were given a hard command; to go through the camp with swords and kill those who stubbornly remained in their rebellion. That day, about 3,000 men died. It was a moment of painful separation – a boundary drawn between those who repented and those who refused. God was showing that holiness and rebellion cannot live together. The Levites’ stand that day would later earn them the role of God’s chosen priestly tribe – not because they were perfect, but because they chose Him in the time of crisis.

But judgment didn’t end with the sword. A plague followed. Scripture says: “And the LORD plagued the people, because they made the calf, which Aaron made” (Exodus 32:35). The people had broken covenant – and God’s justice responded.

And God said something very serious: “Whoever has sinned against Me, I will blot him out of My book” (Exodus 32:33). A deep truth, not all sin is forgotten without repentance. Moses, again the mediator, pleads for mercy, even offering to be blotted out himself if it would save the people. But each one is accountable for their own sin.

This moment teaches us that even after deliverance from Egypt, the heart can still wander. And when it does, there are consequences, bitter ones. But it also shows that God honors those who stand with Him when it’s not easy. The line was drawn, and the Levites crossed it – to stand with truth, even when it hurt.

Our lesson

Just like in the days of Israel, today the world is once again dancing around a golden calf. No, not a statue made of metal, but something worse. Modern idols don’t always look like animals. They wear the shape of money, fame, pleasure, false teachings, self-worship, and political power. We’ve taken the blessings God gave us, life, money, talents, technology, wealth, success, and knowledge – and used them to build new idols. Just like the Israelites used the gold from Egypt to form a calf, today’s world is using God’s blessings to create gods of their own making.

And the judgment has begun. Just like Moses descended suddenly from the mountain and brought judgment with him, Christ too has descended like a thief. Revelation 18 says that Babylon – the great false religious and political system along with other systems – will fall. Every idol, every proud thing lifted up against God, will be thrown down. The voice of Christ will shatter them, just like Moses burnt the idol. And just like Moses made the people drink the powder of their idol, the people today will be made to drink the consequences of their choices.

Jeremiah 2:19 says it plainly:
“Your own wickedness will correct you, your backslidings will reprove you. Know and see that it is an evil and bitter thing…”
Revelation 18:6 adds:
“Give her as much torment and grief as the glory and luxury she gave herself.”

This is a serious moment in time. We are no longer waiting for judgment, we are living in the beginning of it. The idols of today will not last. They will turn bitter inside those who worship them. What looked like joy will become ruin. What seemed like success will end in shame.

Just like Moses cried out, “Who is on the Lord’s side?”, Christ is standing at the door today, saying the same thing.
Revelation 18:4: “Come out of her, My people, so that you don’t share in her sins or receive her plagues.”
2 Corinthians 6:17 echoes it:
“Come out from among them and be separate, says the Lord. Do not touch the unclean thing.”

He’s not calling the world. He’s calling His people; the ones who claim to follow Him – to step out of religious corruption, false systems, immoral societies, and lies dressed as truth. The church is not just in danger of idolatry; in many places, it has already mixed truth with error, just like Aaron did.

Let us not be like Aaron, giving clever excuses or blaming others. Let us be like the Levites. They stepped forward and said, “We’re with the Lord.” They didn’t wait to be popular. They chose to be pure. And because of their loyalty, God chose them to serve as priests.

Today, we are called to walk through the camp; not with a sword of iron, but with the Sword of the Spirit, which is the Word of God (Ephesians 6:17). We are called to stand for truth in a world drowning in lies. Christ is not looking for crowds; He’s looking for courage. He is not impressed by noise – He’s searching for loyalty. He is not interested in how much we sing – but whether we stand for Him when it costs something.

This is not just a lesson from history. This is a call for today. The line is being drawn again and the judgment has started. The only safe place is to be on the Lord’s side.

Prayer

Heavenly Father,
Help us not to worship the blessings You gave us, but to worship You alone. Cleanse us from every hidden idol and give us the courage to stand on Your side, even when the world is against us.

In Jesus Christ’s name we pray, Amen.

காலை வெளிச்சம் - சங்கீதம் 143:8

இன்றைய நாளின் வசனம்

“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”

பாளயத்திலிருந்து கொண்டாட்ட சத்தம் எழுந்தபோது, மோசே கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளுடன் மலையிலிருந்து இறங்கினார். ஆனால் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை உடைத்தது; கற்பலகைகளையும் உடைத்தது. அங்கே, தங்கக் கன்று மற்றும் அதைச் சுற்றி நடனமாடும் மக்கள் தெளிவாகத் தெரிந்தன. விக்கிரக ஆராதனை ஏற்கனவே வேரூன்றியிருந்தது. நீதியான கோபத்தில், மோசே அந்த விக்கிரகத்தை தீயில் எரித்து, பொடியாக்கி, தண்ணீரில் தூவினார். பின்னர் மக்களை அதைக் குடிக்கச் செய்தார். ஆம், அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த அவமானத்தை அவர்கள் சுவைக்கும்படி செய்தார் – அவர்கள் வணங்கியது அவர்களுக்கு உள்ளே கசப்பாக மாறியது. இது ஒரு சரீர ஞாபகம்: பாவம் தங்கம் போல் பிரகாசிக்கலாம், ஆனால் இறுதியில், அது கசப்பானதும் அவமானகரமானதுமாகும்.

பின்னர் மோசே பாளையத்தின் வாசலில் நின்று கூக்குரலிட்டார்: “கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான்!” லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடினமான கட்டளை கொடுக்கப்பட்டது; பாளையத்தில் பட்டயத்துடன் சென்று, தங்கள் கலகத்தில் பிடிவாதமாக இருப்பவர்களைக் கொல்லுங்கள். அந்த நாளில், சுமார் 3,000 ஆண்கள் இறந்தனர். இது ஒரு வேதனையான பிரிவின் தருணம் – மனந்திரும்பியவர்களுக்கும் மறுத்தவர்களுக்கும் இடையே ஒரு எல்லை வரையப்பட்டது. பரிசுத்தமும் கலகமும் ஒன்றாக வாழ முடியாது என்பதை கடவுள் காட்டினார். அந்த நாளில் லேவியர்கள் எடுத்த நிலைப்பாடு, பின்னர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசாரிய கோத்திரமானப் பங்கை அவர்களுக்குப் பெற்றுத் தந்தது – அவர்கள் பரிபூரணமாக இல்லை என்பதால் அல்ல, ஆனால் நெருக்கடியின் நேரத்தில் அவரைத் தேர்ந்தெடுத்ததால்.

ஆனால் நியாயத்தீர்ப்பு பட்டயத்தோடு முடிவடையவில்லை. அதைத் தொடர்ந்து ஒரு வாதை வந்தது. வேதாகமம் கூறுகிறது: “ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.” (யாத்திராகமம் 32:35). மக்கள் உடன்படிக்கையை மீறினர் – கடவுளின் நீதி அதற்குப் பதிலளித்தது.

மேலும் கடவுள் மிகவும் கடுமையான ஒன்றைச் சொன்னார்: “எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.” (யாத்திராகமம் 32:33). ஒரு ஆழமான உண்மை என்னவென்றால், எல்லா பாவங்களும் மனந்திரும்பாமல் மன்னிக்கப்படுவதில்லை. மீண்டும் மத்தியஸ்தரான மோசே, கிருபைக்காக மன்றாடுகிறார், மக்களைக் காப்பாற்றுவதற்காக தன்னையே அழிக்கவும் தயாராக உள்ளார். ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாவத்திற்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.

இந்த தருணம் நமக்கு கற்பிக்கிறது, எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், இதயம் இன்னும் அலைந்து திரியலாம். அது நடக்கும்போது, விளைவுகள் உள்ளன, கசப்பானவை. ஆனால் கடினமான நேரத்தில் அவருடன் நிற்பவர்களை கடவுள் மதிக்கிறார் என்பதும் இது காட்டுகிறது. எல்லை வரையப்பட்டது, லேவியர்கள் அதைக் கடந்தனர் – அது வலித்தாலும் கூட, சத்தியத்திற்காக நிற்க.

நமக்கானப் பாடம்

இஸ்ரயேலின் நாட்களைப் போலவே, இன்றும் உலகம் மீண்டும் ஒரு தங்கக் கன்றைச் சுற்றி நடனமாடுகிறது. இல்லை, உலோகத்தால் செய்யப்பட்ட சிலை அல்ல, ஆனால் அதைவிட மோசமான ஒன்று. நவீன விக்கிரகங்கள் எப்போதும் விலங்குகளின் வடிவத்தில் இருக்காது. அவை பணம், புகழ், இன்பம், தவறான போதனைகள், தன்னை வணங்குதல் மற்றும் அரசியல் அதிகாரம் போன்ற வடிவங்களை எடுக்கின்றன. கடவுள் நமக்கு கொடுத்த ஆசீர்வாதங்களான வாழ்க்கை, பணம், திறமைகள், தொழில்நுட்பம், செல்வம், வெற்றி மற்றும் அறிவை – நாம் புதிய விக்கிரகங்களை உருவாக்க பயன்படுத்துகிறோம். இஸ்ரயேலியர்கள் எகிப்திலிருந்து பெற்ற தங்கத்தைக் கொண்டு ஒரு கன்றை உருவாக்கியதைப் போல, இன்றைய உலகம் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த தெய்வங்களை உருவாக்குகிறது.

மேலும் நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது. மோசே திடீரென மலையிலிருந்து இறங்கி தீர்ப்பைக் கொண்டு வந்ததைப் போல, கிறிஸ்துவும் ஒரு திருடனைப் போல இறங்கியுள்ளார். வெளிப்படுத்தின விசேஷம் 18 கூறுகிறது, பாபிலோன் – மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து – பெரிய பொய் மத மற்றும் அரசியல் அமைப்பு – வீழ்ச்சியடையும். ஒவ்வொரு விக்கிரகமும், கடவுளுக்கு எதிராக உயர்த்தப்பட்ட ஒவ்வொரு பெருமையும் கீழே வீழ்த்தப்படும். கிறிஸ்துவின் குரல் அவற்றை நொறுக்கும், மோசே விக்கிரகத்தை எரித்ததைப் போல. மோசே மக்களை தங்கள் விக்கிரகத்தின் பொடியைக் குடிக்கச் செய்ததைப் போல, இன்றைய மக்கள் தங்கள் தேர்வுகளின் விளைவுகளைக் குடிக்கச் செய்யப்படுவார்கள்.

எரேமியா 2:19 தெளிவாகக் கூறுகிறது:
“உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள்…”
வெளிப்படுத்தின விசேஷம் 18:7 சேர்க்கிறது:
“அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள்..”

இது நேரத்தின் ஒரு கடுமையான தருணம். நாம் இனி நியாயத்தீர்ப்புக்காகக் காத்திருக்கவில்லை, அதன் ஆரம்பத்தில் வாழ்கிறோம். இன்றைய விக்கிரகங்கள் நிலைக்காது. அவற்றை வணங்குபவர்களுக்கு உள்ளே கசப்பாக மாறும். மகிழ்ச்சியாகத் தோன்றியது அழிவாக மாறும். வெற்றியாகத் தோன்றியது அவமானத்தில் முடியும்.

மோசே “கர்த்தருடைய பட்சத்தில் யார் இருக்கிறார்கள்?” என்று கூக்குரலிட்டதுப் போல, கிறிஸ்து இன்று கதவின் வாசலில் நின்று அதையே சொல்கிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:4: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”
2 கொரிந்தியர் 6:17 அதை எதிரொலிக்கிறது:
“நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”

அவர் உலகத்தை அழைக்கவில்லை. அவர் தம் மக்களை அழைக்கிறார்; அதாவது அவரைப் பின்பற்றுவதாகக் கூறுபவர்களை – மத ஊழல்களிலிருந்து, பொய் அமைப்புகளிலிருந்து, ஒழுக்கக்கேடான சமூகங்களிலிருந்து, உண்மை போல் வேடமிட்ட பொய்களிலிருந்து வெளியேற அழைக்கிறார். திருச்சபை விக்கிரக ஆராதனையின் ஆபத்தில் மட்டும் இல்லை; பல இடங்களில், அது ஏற்கனவே சத்தியத்தை பிழையுடன் கலந்துவிட்டது, ஆரோன் செய்ததைப் போல.

நாம் ஆரோனைப் போல இருக்கக்கூடாது, புத்திசாலித்தனமான சாக்குப்போக்குகளைச் சொல்லி அல்லது மற்றவர்களைக் குறை கூறுவதையோ நாம் செய்யக்கூடாது. நாம் லேவியர்களைப் போல இருக்க வேண்டும். அவர்கள் முன்னேறி வந்து, நாங்கள் கர்த்தருடனே இருக்கிறோம்.” அவர்கள் பிரபலமாக இருக்கக் காத்திருக்கவில்லை. பரிசுத்தமாக இருக்க தேர்ந்தெடுத்தார்கள். அவர்களின் விசுவாசத்திற்காக, தேவன் அவர்களை ஆசாரியர்களாகப் பணியாற்றத் தேர்ந்தெடுத்தார்.

இன்று, நாமும் பாளயத்தின் வழியாக நடந்து செல்ல அழைக்கப்பட்டிருக்கிறோம்; இரும்பு பட்டயத்துடன் அல்ல, ஆனால் தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் (எபேசியர் 6:17). பொய்களில் மூழ்கிய உலகத்தில் சத்தியத்திற்காக நிற்க அழைக்கப்பட்டிருக்கிறோம். கிறிஸ்து கூட்டத்தைத் தேடவில்லை – தைரியத்தைத் தேடுகிறார். அவர் சத்தத்தால் ஈர்க்கப்படவில்லை – விசுவாசத்தைத் தேடுகிறார். நாம் எவ்வளவு பாடுகிறோம் என்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை – ஆனால் ஏதாவது செலவாகும்போது நாம் அவருக்காக நிற்கிறோமா என்பதில் ஆர்வமாயிருக்கிறார்.

இது வெறும் வரலாற்றிலிருந்து வந்த ஒரு பாடம் மட்டுமல்ல. இது இன்றைய காலத்திற்கான அழைப்பு. எல்லை மீண்டும் வரையப்படுகிறது, நியாயத்தீர்ப்பு ஆரம்பமாகிவிட்டது. பாதுகாப்பான ஒரே இடம் கர்த்தரின் பக்கமாக இருத்தலே.

ஜெபம்

பரலோகப் பிதாவே,
நீர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களை வணங்காமல், உம்மை மட்டுமே வணங்க எங்களுக்கு உதவியருளும். மறைந்திருக்கும் ஒவ்வொரு மறைந்த விக்கிரகத்திலிருந்தும் எங்களைத் தூய்மைப்படுத்தி, உலகம் எங்களுக்கு எதிராக இருந்தாலும், உமது பக்கம் நிற்க எங்களுக்குத் தைரியம் தந்தருளும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *