Verse of the Day
It was a special moment in Israel’s journey. They were no longer slaves in Egypt. They were no longer aimless wanderers. Now, they were builders; builders of God’s house.
God had given Moses the pattern, but the actual work was carried out by two specially chosen men: Bezalel and Aholiab. Bezalel’s name meant “in the shadow of God”– what a beautiful picture. He was from the tribe of Judah and had been filled with the Spirit of God; filled with wisdom, understanding, and skill in every kind of craftsmanship. Gold, silver, bronze, wood, stone, and fabric – there was nothing too hard for him because God’s Spirit was working in him.
Aholiab’s name meant “Father’s tent”. He was from the tribe of Dan, the lowest tribe in the camp, but God honored him by making him the helper of Bezalel. He was gifted in embroidery, weaving, and also teaching others. Together, they led the building of the tabernacle; the very place where God would dwell with His people.
They didn’t build alone. All who were skilled and willing-hearted came forward to work. But the materials – where did they come from? From the people! Gold, silver, bronze, linen, animal skins, gems; all of it was brought by the Israelites as freewill offerings.
And here’s something amazing. The people gave so much – so much – that Moses had to tell them to stop. Yes, he restrained them from giving more (Exodus 36:5-7). What a beautiful problem to have: people being so generous that the leaders had to say, “It’s enough!”
Now, as we walk through these chapters, we see every item God commanded being carefully crafted: from the Ark of the Covenant, where God’s presence would rest to the priestly Garments.
Everything was made exactly according to the pattern shown to Moses on the mountain.
Then came a most special moment. On the 1st day of the 1st month of the 2nd year, the Tabernacle was finally set up. This wasn’t just a date; it was exactly one year since they had left Egypt. One year ago, they were slaves. Now, they had become a holy nation with God’s presence among them.
The Tabernacle was finished right on time; on God’s time. Their new calendar didn’t begin with Pharaoh’s festivals. It began with God’s presence.
And when Moses finished the work, the cloud covered the Tabernacle and the glory of the LORD filled it. Moses couldn’t even enter the Tent because God’s presence was so overwhelming (Exodus 40:34-35). From that day onward, the cloud of God would lead them by day, and fire by night. When the cloud lifted, they moved. When it stayed, they stayed.
Now let’s reflect on the spiritual meaning for us, the New Creation.
Bezalel and Aholiab represent you and me; anointed and chosen to build God’s house today.
Not a tent made of fabric, but a spiritual house; the Body of Christ, the Church, and even our own lives.
We are being built into a holy dwelling (Ephesians 2:22). The skills and wisdom given to Bezalel and Aholiab come from the Spirit of God, and that same Spirit now dwells in us to shape our lives with holiness, order, and beauty.
Now here’s a secret:
Bezalel’s name means “in the shadow of God,” and Aholiab’s name means “tent of the Father.” Together they show us of God’s Love – those who stay under God’s shadow and serve in the Father’s tent are the ones whom God uses to build His glory.
And the materials? Gold, silver, linen, gems; these all came from the blessings that God had given the Israelites when they left Egypt. Likewise, everything we use to serve God today; our talents, money, time, gifts – they are not ours. They were given by Him, and we offer them back to build His kingdom.
Even more, notice the detail: the Tabernacle was built exactly as God said. Nothing was done randomly. This tells us something critical: in our spiritual life, God is a God of order, precision, and purpose. We cannot worship Him casually. Every part of our life – our thoughts, our words, our time – must be aligned to His divine pattern.
And now comes a powerful insight:
One year before this Tabernacle was set up, they were slaves. Now, they’re living with God’s glory in their midst. What changed? Their hearts. From rebellion at Sinai to surrender in the wilderness, they were transformed.
A Hidden Gem – The New Year
The fact that the Tabernacle was set up on the first day of the first year is not a coincidence. It’s a spiritual symbol. God is resetting their calendar – not by the moon or by Pharaoh, but by His own presence. This is a new beginning, a spiritual new year.
Let’s ask ourselves:
Has God’s presence become the starting point of my life? Have we reset our calendar around Him?
Final Thought
The Tabernacle was God’s way of saying:
“I’m no longer distant. I live with you now.”
And today, we are His Tabernacle. Not built with fabric and gold, but with hearts filled by His Spirit.
Just as the cloud filled the Tabernacle, may the Spirit fill our hearts. Just as every item was crafted with care, may our character reflect His holiness. And just as the people gave freely, may we offer ourselves daily as living sacrifice – not part, but the whole.
Prayer
Heavenly Father, make us builders of Your house, guided by Your Spirit like Bezalel and Aholiab. Let our hearts be aligned to Your pattern, offering our lives as living sacrifice.
May Your presence be our beginning, and Your glory fill all we do.
In Jesus Christ name we pray, Amen
இன்றைய நாளின் வசனம்
இது இஸ்ரயேலின் பயணத்தில் ஒரு சிறப்பான தருணம். அவர்கள் இனி எகிப்தில் அடிமைகளாக இல்லை. அவர்கள் இனி இலக்கில்லாமல் அலைந்து திரிபவர்களாக இருக்கவில்லை. இப்போது, அவர்கள் கட்டடக்காரர்கள்; தேவனின் வீட்டைக் கட்டும் கட்டடக்காரர்கள்.
தேவன் மோசேக்கு மாதிரியைக் கொடுத்திருந்தார், ஆனால் உண்மையான வேலை இரண்டு சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களால் செய்யப்பட்டது: பெசலெயேல் மற்றும் அகோலியாப். பெசலெயேல் என்ற பெயருக்கு “தேவனின் நிழலில்” என்று பொருள் – என்ன ஒரு அழகான காட்சி. அவர் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர் மற்றும் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்; ஞானம், புரிதல் மற்றும் எல்லா விதமான கைவினைத் திறன்களால் நிரம்பியிருந்தார். தங்கம், வெள்ளி, வெண்கலம், மரம், கல் மற்றும் வஸ்திரம்- அவருக்கு எதுவும் கடினமாக இல்லை, ஏனெனில் தேவனின் ஆவி அவரில் வேலை செய்து கொண்டிருந்தது.
அகோலியாப் என்ற பெயருக்கு “தந்தையின் கூடாரம்” என்று பொருள். அவர் தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர், பாளயத்தில் மிகத் தாழ்ந்த கோத்திரம், ஆனால் தேவன் அவரை பெசலெயேலின் உதவியாளராக ஆக்கி மகிமைப்படுத்தினார். அவர் கைத்தறி, நெசவு மற்றும் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் திறமைசாலியாக இருந்தார். ஒன்றாக, அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டினார்கள்; தேவன் தன் மக்களுடன் வசிக்கும் இடம் அதுதான்.
அவர்கள் தனியாக கட்டவில்லை. திறமையும் இதயமும் உள்ள அனைவரும் வேலைக்கு முன்வந்தனர். ஆனால் பொருட்கள் – அவை எங்கிருந்து வந்தன? மக்களிடமிருந்து! தங்கம், வெள்ளி, வெண்கலம், மெல்லிய பஞ்சுநூல், விலங்குத் தோல்கள், இரத்தினக்கற்கள்; இவை அனைத்தும் இஸ்ரயேலர்களால் மனம்வந்து காணிக்கையாகக் கொண்டு வரப்பட்டன.
இங்கே ஒரு அதிசயம் உள்ளது. மக்கள் மிகவும் அதிகமாக கொடுத்தனர் – மிகவும் அதிகமானதால் – மோசே அவர்களிடம் நிறுத்தச் சொல்ல வேண்டியிருந்தது. ஆம், அவர் அவர்களை மேலும் கொடுப்பதை தடுத்தார். (யாத்திராகமம் 36:5-7). எவ்வளவு அழகான பிரச்சனை: மக்கள் மிகவும் தாராளமாக இருப்பதால், தலைவர்கள் “போதும்!” என்று சொல்ல வேண்டியிருந்தது.
இப்போது, இந்த அத்தியாயங்களில் நாம் பயணிக்கும்போது, தேவன் கட்டளையிட்ட ஒவ்வொரு பொருளும் மிகுந்த கவனத்துடனும் கைவினை நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டதை காண்கிறோம்: கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டியில் இருந்து, தேவனின் பிரசன்னம் இருக்கும் இடம் வரை, முதல் ஆசாரியர் வஸ்திரங்கள் வரைக்கும்.
எல்லாம் மலையில் மோசேக்குக் காட்டப்பட்ட மாதிரியின்படி அனைத்தும் சரியாக செய்யப்பட்டன.
பின்னர் ஒரு மிக சிறப்பான தருணம் வந்தது. இரண்டாம் ஆண்டின் முதலாம் மாதத்தின் முதல் நாளில், ஆசாரிப்புக் கூடாரம் இறுதியாக அமைக்கப்பட்டது. இது ஒரு தேதி மட்டுமல்ல; அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறி சரியாக ஒரு வருடம் ஆயிற்று. ஒரு ஆண்டுக்கு முன்பு, அவர்கள் அடிமைகளாக இருந்தனர். இப்போது, அவர்கள் கடவுளின் பிரசன்னம் உள்ள பரிசுத்த ஜாதியாக மாறினர்.
ஆசாரிப்புக் கூடாரம் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டது; தேவனின் நேரத்தில். அவர்களின் புதிய காலண்டர் பார்வோனின் விழாக்களுடன் தொடங்கவில்லை. அது தேவனின் பிரசன்னத்துடன் தொடங்கியது.
மோசே வேலையை முடித்ததும், மேகம் ஆசாரிப்புக் கூடாரத்தை மூடியது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது. (யாத்திராகமம் 40:34-35). அந்த நாளிலிருந்து, பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும் அவர்களை வழிநடத்தியது. வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரயேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்.
இப்போது நாம், புதிய சிருஷ்டியாகிய நம்மைப் பற்றிய ஆவிக்குரிய அர்த்தத்தை சிந்திப்போம்.
பெசலெயேல் மற்றும் அகோலியாப் உங்களையும் என்னையும் குறிக்கின்றனர்; தேவனின் வீட்டை இன்று கட்ட அபிஷேகம் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
வஸ்திரத்தால் செய்யப்பட்ட கூடாரம் அல்ல, ஆனால் ஒரு ஆவிக்குரிய வீடு; கிறிஸ்துவின் சரீரம், சபை, மற்றும் நம் சொந்த வாழ்க்கை கூட.
நாம் ஒரு பரிசுத்த தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்படுகிறோம் (எபேசியர் 2:22). பெசலெயேல் மற்றும் அகோலியாபுக்கு கொடுக்கப்பட்ட திறமைகளும் ஞானமும் தேவனின் ஆவியிலிருந்து வந்தவை, அதே ஆவி இப்போது நம்மில் வசிக்கிறது, நம் வாழ்க்கையை பரிசுத்தம், ஒழுங்கு மற்றும் அழகுடன் வடிவமைக்கிறது.
இங்கே ஒரு இரகசியம் உள்ளது:
பெசலெயேல் என்ற பெயருக்கு “தேவனின் நிழலில்” என்று பொருள், அகோலியாப் என்ற பெயருக்கு “தந்தையின் கூடாரம்” என்று பொருள். இவர்கள் இருவரும் நமக்கு தேவனின் அன்பைக் காட்டுகின்றனர் – தேவனின் நிழலில் தங்கியிருந்து, தந்தையின் கூடாரத்தில் சேவை செய்பவர்களே கடவுள் தன் மகிமையைக் கட்ட பயன்படுத்தும் கருவிகள்.
பொருட்கள் என்ன? தங்கம், வெள்ளி, மெல்லிய பஞ்சுநூல், இரத்தினக்கற்கள்; இவை அனைத்தும் இஸ்ரயேலர்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களிலிருந்து வந்தவை. அதுபோல, இன்று நாம் தேவனுக்கு சேவை செய்ய பயன்படுத்தும் அனைத்தும்; நமது திறமைகள், பணம், நேரம், பரிசுகள் – அவை நமக்கு சொந்தமல்ல. அவை அவரால் கொடுக்கப்பட்டவை, நாம் அவற்றை மீண்டும் அவரது ராஜ்யத்தைக் கட்டுவதற்காக அர்ப்பணிக்கிறோம்.
மேலும், விவரத்தைக் கவனியுங்கள்: ஆசாரிப்புக் கூடாரம் தேவன் சொன்னபடியே சரியாகக் கட்டப்பட்டது. எதுவும் தற்செயலாக செய்யப்படவில்லை. இது நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறது: நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒழுங்கின் கடவுள், துல்லியம் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் கடவுள். நாம் அவரை சாதாரணமாக ஆராதிக்க முடியாது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் – நமது எண்ணங்கள், வார்த்தைகள், நேரம் – அவரது தெய்வீக வடிவத்திற்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும்.
இப்போது ஒரு சக்திவாய்ந்த நுண்ணறிவு வருகிறது:
இந்த ஆசாரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு, அவர்கள் அடிமைகளாக இருந்தனர். இப்போது, அவர்கள் தேவனின் மகிமையுடன் வாழ்கிறார்கள். என்ன மாறியது? அவர்களின் இதயங்கள். சீனாய் மலையில் கலகம் செய்வதிலிருந்து வனாந்தரத்தில் சரணடைவது வரை, அவர்கள் மாற்றப்பட்டனர்.
ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் – புது வருடம்
ஆசாரிப்புக் கூடாரம் முதல் வருடத்தின் முதல் நாளில் அமைக்கப்பட்டது என்பது தற்செயல் அல்ல. இது ஒரு ஆவிக்குரிய சின்னம். கடவுள் அவர்களின் காலண்டரை மீட்டமைக்கிறார் – சந்திரன் அல்லது பார்வோனால் அல்ல, ஆனால் சொந்த பிரசன்னத்தால். இது ஒரு புதிய ஆரம்பம், ஒரு ஆவிக்குரிய புது வருடம்.
நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்:
தேவனின் பிரசன்னம் என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியாக மாறிவிட்டதா? நாம் நமது காலண்டரை அவரைச் சுற்றி மீட்டமைத்துள்ளோமா?
இறுதி சிந்தனை
ஆசாரிப்புக் கூடாரம் தேவனின் செய்தி:
“நான் இனி தொலைவில் இல்லை. நான் இப்போது உங்களுடன் வசிக்கிறேன்.”
இன்று, நாம் அவரது ஆசாரிப்புக் கூடாரமாக ஆகிறோம். வஸ்திரம் மற்றும் தங்கத்தால் கட்டப்படவில்லை, ஆனால் அவரது ஆவியால் நிரப்பப்பட்ட இதயங்களால்.
மேகம் ஆசாரிப்புக் கூடாரத்தை நிரப்பியதைப் போல, தேவனின் ஆவி நம் இதயங்களை நிரப்பட்டும். ஒவ்வொரு பொருளும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டது போல, நம் குணமும் அவரது பரிசுத்தத்தை பிரதிபலிக்கட்டும். மக்கள் தாராளமாக கொடுத்தது போல, நாமும் நம் வாழ்க்கையை தினமும் ஒரு ஜீவனுள்ள பலியாக அர்ப்பணிப்போம் — ஒரு பகுதியல்ல, முழுவதுமாக.
ஜெபம்
பரலோக பிதாவே, பெசலெயேல் மற்றும் அகோலியாபைப் போல உமது ஆவியால் வழிநடத்தப்பட்டு, உமது வீட்டைக் கட்டும் கருவிகளாக எங்களை ஆக்குவீராக. எங்கள் இதயங்கள் உமது வடிவத்திற்கு ஏற்ப அமைந்திருக்கட்டும், எங்கள் வாழ்க்கைகளை ஜீவனுள்ள பலியாக அர்ப்பணிக்கிறோம். உமது பிரசன்னம் எங்கள் தொடக்கமாக இருக்கட்டும், உமது மகிமை நாங்கள் செய்யும் அனைத்தையும் நிரப்பட்டும்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.
© 2023 The Millennium Post