July 23

2 weeks ago

Morning Light

Morning Light - Psalm 143:8

Verse of the Day

Romans 12:2 Be not conformed to this world: but be ye transformed by the renewing of your mind, that ye may prove what is that good, and acceptable, and perfect, will of God.

Aaron’s Sin

The people waited… and waited. Moses was gone up the mountain for forty days and nights, and there was no sign of him. In their impatience, they turned to Aaron and demanded, “Make us gods to go before us!” It’s shocking; this is the same people who just heard God’s voice from the mountain, saw the thunder, felt the earth shake. And yet, in their restlessness, they gave up on the living God.

Aaron – Moses’ own brother, the one who stood next to him in miracles and messages also gave in. He told the people to bring their gold, which they had received from Egypt. That gold was meant for something holy. God had given it to them to build the Tabernacle – the place where He would dwell among them. But instead, they took God’s gift and used it for sin.

Aaron took the gold, fashioned it with an engraving tool, and made a golden calf. Not only that, but he also built an altar before it and announced a feast; calling it a feast “to the LORD.” He tried to mix idol worship with the name of Yahweh, blending truth with deception, just like many do today. That’s dangerous – God is not honored by false worship, no matter how sincere it looks on the surface.

When Moses came down and saw the sin, he was furious. He smashed the tablets of the covenant, ground the golden calf to powder, and turned to Aaron. And here, Aaron gave one of the weakest excuses in his entire life. He said in Exodus 32:24, “I threw the gold into the fire, and out came this calf!” But we already read in verse 4 that Aaron himself had fashioned it with a tool. This was a lie. A desperate excuse, much like Adam blaming Eve. It’s human nature – when caught, we avoid responsibility.

But God saw the truth. In Deuteronomy 9:20, Moses later says, “The LORD was very angry with Aaron, to have destroyed him: and I prayed for Aaron also at that same time.” God was ready to strike Aaron down. It was not Aaron’s innocence that saved him – it was Moses’ intercession. That’s grace.

And yet, Aaron did not fight the correction. He didn’t argue back or defend himself further. He later became the High Priest and served faithfully. His failure was not the end; it was a turning point. Sometimes, the fall of a leader doesn’t disqualify them forever if there is genuine repentance and restoration.

Now, why a calf? Egypt’s influence lingered. The Egyptians worshiped bull gods like Apis and Hathor; symbols of strength, power, fertility, and protection. The Israelites had lived among those gods for centuries. And even though they had left Egypt physically, Egypt had not yet left their hearts. The golden calf was familiar, and so they returned to what they knew – a visual, tangible god they could touch. But in doing so, they broke the very covenant that had just been made.

Our Lesson

This part of Israel’s journey isn’t just history; it’s a mirror. When we look closer, we see ourselves. God had given them gold, not for luxury, but for something holy – the tabernacle, His dwelling place. But they turned that gold into an idol. This shows us a powerful lesson: when God blesses us with time, talent, or resources, they must be used for His purpose. If not, even blessings can become a snare. We must ask ourselves: Are we using what God gave us for worship, or for distraction and pleasure?

Then comes Aaron’s excuse. “It just came out of the fire!” But the Bible says Aaron shaped that calf with his own hands (Exodus 32:4). This wasn’t an accident. It was a deliberate action, followed by a weak excuse. And that teaches us something vital: excuses don’t remove guilt. Covering sin with soft words cannot be hidden from God’s eyes. Instead, He looks for honesty and repentance.

Even leaders can fall. Aaron wasn’t just a helper; he was chosen to be High Priest. And yet, he gave in to pressure, made an idol, and lied. But here’s the beauty: God was angry, ready to destroy Aaron (Deuteronomy 9:20), but Moses prayed for him. And that intercession saved him. Later, Aaron still became the High Priest. This shows that with humility and prayer, even failures can be restored. Just as Moses interceded for Aaron, Christ now intercedes for us (Hebrews 7:25). He intercedes for our weakness, pleads for our restoration.

Why did they make a calf? Because of fear, impatience, and the influence of Egypt. The people thought Moses was gone too long. They panicked. And in panic, they turned back to what was familiar; the Egyptian gods they had seen all their lives. This is another warning: idolatry doesn’t always begin with rebellion. Sometimes, it begins with fear, or with the thought that God is taking too long. We must trust God’s timing.

And Egypt? It represents the world. Even though they were free from Egypt, Egypt still lived in their hearts. That’s why Romans 12:2 tells us, “Be not conformed to this world, but be transformed by the renewing of your mind.” True freedom means letting go; not just of the chains, but of the memories and desires tied to them.

Prayer

Heavenly father, help us not to turn Your blessings into idols.
Give us the courage to realize and correct our mistakes and give us the grace to rise again.
Renew our hearts and keep us faithful to Your purpose.
In Jesus Christ’s name we pray. Amen

காலை வெளிச்சம் - சங்கீதம் 143:8

இன்றைய நாளின் வசனம்

ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

மக்கள் காத்திருந்தனர்… மேலும் காத்திருந்தனர். மோசே மலையின் மேல் நாற்பது நாட்கள் பகலும் இரவும் இருந்தார், ஆனால் அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை. அவர்களுடைய பொறுமையின்மையில், அவர்கள் ஆரோனிடம் திரும்பி, “நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும்!” என்று கோரினர். இது அதிர்ச்சியளிக்கிறது; இதே மக்கள் மலையிலிருந்து தேவனுடைய சத்தத்தைக் கேட்டனர், இடியின் சத்தத்தைக் கண்டனர், பூமி அதிர்வதை உணர்ந்தனர். ஆனாலும், அவர்களுடைய அமைதியின்மையில், அவர்கள் ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டனர்.

ஆரோன் – மோசேயின் சொந்த சகோதரர், அதிசயங்களிலும் செய்திகளிலும் அவருக்கு அருகில் நின்றவர் – அவரும் இணங்கினார். அவர் மக்களிடம் தங்கத்தைக் கொண்டுவரும்படி கூறினார், அது எகிப்திலிருந்து பெற்றவை. அந்த தங்கம் பரிசுத்தமான ஒன்றுக்காக, தேவன் அதை அவர்களுக்கு கொடுத்திருந்தார், ஆசாரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்காக – அவர் அவர்கள் மத்தியில் வசிக்கும் இடம். ஆனால் அதற்கு பதிலாக, அவர்கள் தேவனுடைய பரிசை எடுத்து பாவத்திற்காகப் பயன்படுத்தினர்.

ஆரோன் தங்கத்தை எடுத்து, ஒரு சிற்பக்கருவியினால் வடிவமைத்து, ஒரு பொற்கன்றுக்குட்டியை செய்தான். அதுமட்டுமல்ல, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தையும் கட்டி, ஒரு விருந்தை அறிவித்தான்; அதை “கர்த்தருக்கு” ஒரு பண்டிகை என்று அழைத்தான். அவர் விக்கிரக ஆராதனையை “யாவே”யின் பெயருடன் கலக்க முயன்றான், உண்மையை வஞ்சகத்துடன் கலக்க முயன்றான், இன்று பலர் செய்வது போல. அது ஆபத்தானது – தேவன் பொய் ஆராதனையால் மகிமைப்பட மாட்டார், அது மேலோட்டத்தில் எவ்வளவு நேர்மையாகத் தோன்றினாலும்.

மோசே கீழே வந்து பாவத்தைக் கண்டபோது, அவர் கோபமடைந்தார். அவர் தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரயேல் புத்திரர் குடிக்கும்படி செய்தார். பின்னர் ஆரோனிடம் திரும்பினார். இங்கே, ஆரோன் தனது வாழ்நாளில் மிகவும் பலவீனமான சாக்குப்போக்குகளில் ஒன்றைச் சொன்னான். அவர் யாத்திராகமம் 32:24ல், “பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது!” என்று கூறினார். ஆனால் நாம் ஏற்கனவே 4ம் வசனத்தில் படித்தோம், ஆரோன் தானே ஒரு சிற்பக்கருவியினால் அதை உருவாக்கினார். இது ஒரு பொய். ஒரு அவநம்பிக்கையான சாக்குப்போக்கு, ஆதாம் ஏவாளைக் குறை கூறியது போல. இது மனித இயல்பு – பிடிபடும்போது, நாம் பொறுப்பை தவிர்க்கிறோம்.

ஆனால் தேவன் உண்மையைக் கண்டார். உபாகமம் 9:20ல், மோசே பின்னர் கூறுகிறார், “ஆரோன் மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.” தேவன் ஆரோனை அழிக்க தயாராக இருந்தார். ஆரோனின் குற்றமின்மை அவரைக் காப்பாற்றவில்லை – மோசேயின் மன்றாட்டுதான் அவரைக் காப்பாற்றியது. அதுதான் கிருபை.

ஆனாலும், ஆரோன் திருத்தத்தை எதிர்க்கவில்லை. அவன் மேலும் எதிர்த்து வாதிடவோ அல்லது தன்னைத்தானே தற்காத்துக் கொள்ளவில்லை. பின்னர் அவன் பிரதான ஆசாரியரானார் விசுவாசத்துடன் சேவை செய்தார். அவரது தோல்வி முடிவு அல்ல; அது ஒரு திருப்புமுனை. சில நேரங்களில், ஒரு தலைவரின் வீழ்ச்சி அவர்களை நிரந்தரமாக தகுதியற்றவர்களாக ஆக்காது, உண்மையான மனந்திரும்புதலும் மீட்பும் இருந்தால்.

இப்போது, ஏன் ஒரு கன்றுக்குட்டி? எகிப்தின் செல்வாக்கு நீடித்தது. எகிப்தியர்கள் அபிஸ் மற்றும் ஹாத்தோர் போன்ற காளை தெய்வங்களை வணங்கினர்; வலிமை, சக்தி, கருவுறுதல் மற்றும் பாதுகாப்பின் சின்னங்கள். இஸ்ரயேலர்கள் பல நூற்றாண்டுகளாக அந்த தெய்வங்களிடையே வாழ்ந்திருந்தனர். மேலும் அவர்கள் எகிப்தை உடல் ரீதியாக விட்டு வெளியேறியிருந்தாலும், எகிப்து இன்னும் அவர்களுடைய இதயங்களில் இருந்தது. பொற்கன்றுக்குட்டி அவர்களுக்கு பழக்கமானது, அதனால் அவர்கள் அறிந்திருந்தவற்றிற்குத் திரும்பினர் – ஒரு காட்சி, தொடக்கூடிய தெய்வம். ஆனால் அவ்வாறு செய்ததால், அவர்கள் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையை மீறினார்கள்.

நமக்கானப் பாடம்

இஸ்ரயேலின் பயணத்தின் இந்த பகுதி வரலாறு மட்டுமல்ல; இது ஒரு கண்ணாடி. நாம் கூர்ந்து கவனிக்கும்போது, நம்மையே காண்கிறோம். கடவுள் அவர்களுக்கு தங்கத்தைக் கொடுத்தார், ஆடம்பரத்திற்காக அல்ல, ஆனால் பரிசுத்தமான ஒன்றுக்காக – ஆசாரிப்புக் கூடாரம், அவருடைய வசிப்பிடத்திற்காக. ஆனால் அவர்கள் அந்த தங்கத்தை ஒரு விக்கிரகமாக மாற்றினர். இது நமக்கு ஒரு வல்லமை வாய்ந்த பாடத்தைக் காட்டுகிறது: தேவன் நமக்கு நேரம், திறமை அல்லது வளங்களை கொடுக்கும்போது, அவை அவருடைய நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், ஆசீர்வாதங்கள் கூட ஒரு கண்ணியாக மாறக்கூடும். நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்: கடவுள் நமக்குக் கொடுத்தவற்றை நாம் ஆராதனைக்காக பயன்படுத்துகிறோமா, அல்லது கவனச்சிதறலுக்கும் மற்றும் மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்துகிறோமா?

பின்னர் ஆரோனின் சாக்குப்போக்கு வருகிறது. “அது தானாக அக்கினியிலிருந்து வந்துவிட்டது!” ஆனால் வேதாகமம் யாத்திராகமம் 32:4ல், ஆரோன் தனது கைகளால் அந்த கன்றுக்குட்டியை உருவாக்கினார் என்று கூறுகிறது. இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல், அதைத் தொடர்ந்து ஒரு பலவீனமான சாக்குப்போக்கு. இது நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுத் தருகிறது: சாக்குப்போக்குகள் குற்ற உணர்வை நீக்காது. மென்மையான வார்த்தைகளால் பாவத்தை மறைக்க முடியாது, அது கடவுளின் கண்களிலிருந்து மறைக்க முடியாது. மாறாக, அவர் நேர்மையையும் மனந்திரும்புதலையும் தேடுகிறார்.

தலைவர்கள் கூட விழலாம். ஆரோன் வெறும் உதவியாளர் மட்டுமல்ல; அவர் பிரதான ஆசாரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்றாலும், அவர் அழுத்தத்திற்கு இணங்கினார், ஒரு விக்கிரகத்தை உருவாக்கினார், பொய் சொன்னார். ஆனால் இங்கே ஒரு அழகு இருக்கிறது: தேவன் கோபமடைந்தார், ஆரோனை அழிக்க தயாராக இருந்தார் (உபாகமம் 9:20), ஆனால் மோசே அவருக்காக ஜெபித்தார். அந்த ஜெபம் அவரைக் காப்பாற்றியது. பின்னர், ஆரோன் இன்னும் பிரதான ஆசாரியராக ஆனார். மனத்தாழ்மை மற்றும் ஜெபத்தால், தோல்விகளைக் கூட மீட்டெடுக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. மோசே ஆரோனுக்காக மன்றாடியது போல, கிறிஸ்து இப்போது நமக்காக மன்றாடுகிறார். தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். (எபிரெயர் 7:25). அவர் நம்முடைய பலவீனத்திற்காக மன்றாடுகிறார், நம்முடைய மீட்பிற்காக மன்றாடுகிறார்.

ஏன் அவர்கள் ஒரு கன்றுக்குட்டியை செய்தனர்? பயம், பொறுமையின்மை மற்றும் எகிப்தின் தாக்கம் காரணமாக. மோசே அதிக நாட்கள் கடந்தும் திரும்பவில்லை என்று மக்கள் நினைத்தனர். அவர்கள் பயந்து போனார்கள். பயத்தில், அவர்கள் தங்களுக்கு பழக்கமானதை நோக்கி திரும்பினர்; எகிப்திய தெய்வங்கள், அவர்கள் வாழ்நாளெல்லாம் கண்டவை. இது மற்றொரு எச்சரிக்கை: விக்கிரக ஆராதனை எப்போதும் கலகத்துடன் தொடங்குவதில்லை. சில நேரங்களில், அது பயத்துடன் அல்லது தேவன் மிகவும் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறார் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறது. நாம் தேவனுடைய நேரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

எகிப்து எதைக் குறிக்கிறது? அது உலகத்தைக் குறிக்கிறது. அவர்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும், எகிப்து இன்னும் அவர்களுடைய இதயங்களில் வாழ்ந்தது. அதனால்தான் ரோமர் 12:2ல், “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.” என்று கூறுகிறது. உண்மையான விடுதலை என்பது வெளியேறுவது மட்டுமல்ல; அது சங்கிலிகளை மட்டுமல்ல, அவற்றுடன் இணைக்கப்பட்ட நினைவுகள் மற்றும் ஆசைகளையும் விட்டுவிடுவதாகும்.

ஜெபம்

பரலோகப் பிதாவே, எங்கள் ஆசீர்வாதங்களை விக்கிரகங்களாக மாற்றாமல் இருக்க எங்களுக்கு உதவுங்கள். எங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள எங்களுக்கு தைரியம் கொடுங்கள், மீண்டும் எழுந்திருக்க எங்களுக்கு கிருபைத் தாரும். எங்கள் இருதயங்களைப் புதுப்பித்து, உமது நோக்கத்திற்கு எங்களை உண்மையாக வைத்திருங்கள்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *