Verse of the Day
After the golden calf incident, the covenant between God and Israel had been broken. But the story doesn’t end in judgment. It moves toward restoration. God, in His mercy, called Moses once again to the mountain. This time, He said, “Cut two stone tablets like the first ones, and make an ark to hold them. I will write on them the words that were on the first tablets, which you broke.”
So Moses did just that. Early in the morning, he climbed Mount Sinai; carrying the stone tablets, carrying hope – to meet the God who was ready to renew His promise.
And then the Lord came down in the cloud, and stood with Moses. What happened next is one of the most beautiful moments in all of Scripture. God proclaimed His own name as YAHWEH. Not with thunder. Not with fire. But with His character.
He said:
“The LORD, the LORD God,
1. Compassionate,
2. Merciful,
3. Slow to anger,
4. Filled with unfailing love,
5. Full of faithfulness,
6. Showing steadfast love to thousands of generations,
7. Forgiving iniquity,
8. Forgiving rebellion,
9. Forgiving sin.”
This was not just a God of law. This was a God of love. This was a God who delights in mercy. He revealed the heart behind the covenant; not rules carved on stone, but relationship etched in grace.
But even as God proclaimed mercy, He did not abandon justice.
“I will by no means clear the guilty,” He said.
“I visit the iniquity of the fathers upon the children and grandchildren – to the third and fourth generation.”
Now, this doesn’t mean God punishes children for their parents’ sins blindly. No. He is fair. He is just. What it means is this; when families walk in sin, their children often follow. The cycle continues. And that cycle brings judgment.
But if a child turns away from their parent’s wrong path, and walks with God – there is blessing instead of punishment. Think of King Hezekiah. His father Ahaz had rebelled against God, but Hezekiah chose righteousness. And God honored him.
So here in this chapter, we see both sides of God; mercy and truth. Compassion and justice. Forgiveness, but also accountability.
And as Moses bowed low in worship, he cried out again, “O Lord, if we have found grace in Your sight, then go with us… forgive our sin, and take us as Your people.”
And the Lord answered – not with anger, but with a renewed covenant.
That’s the God whom we worship. A God who calls us back, who reveals His heart, and who gives second chances – not because we deserve them, but because He is who He is.
Our Lesson
Have you ever wondered why the Bible speaks of nine fruits of the Holy Spirit – not ten, not eight – but exactly nine? Love, joy, peace, patience, kindness, goodness, faithfulness, gentleness, and self-control. That’s not a random list. If we look closely at Exodus 34, when God revealed Himself to Moses, He described nine attributes of His own character – compassionate, merciful, slow to anger, filled with unfailing love, faithful, showing steadfast love (i.e. mercy) to generations, forgiving iniquity, forgiving rebellion, and forgiving sin.
What does that tell us?
It tells us this: When we are born of His Spirit, we must reflect His image. Just as children look like their parents, we, the children of God, must bear His likeness; not in flesh, but in nature.
“Be holy, for I am holy.” – 1 Peter 1:16
Walk in the Spirit… and bear the fruit of the Spirit
This isn’t just a call to behave better. It’s a call to be transformed – to be filled with the same Spirit that filled Christ, the express image of the Father.
In Exodus 34, we also see that God is both merciful and just. He forgives, but He also holds the guilty accountable. And this is our lesson: Grace is not permission to sin; it’s power to become holy.
When God told Moses to carve new tablets and bring them up the mountain, He was showing us a picture: The old covenant had been broken, but God was ready to write His laws again – not just on stone, but on our hearts.
“You are a letter from Christ… written not with ink but with the Spirit of the living God.”
2 Corinthians 3:3
So today, let us ask ourselves:
Because the New Creation life isn’t just about being saved; it’s about being changed. Changed to look like Christ. To walk as He walked. To forgive like He forgave. To love like He loves.
Let us become living stones, living nature of God – shining as His children, bearing fruit that proves we are of Him.
Prayer
Heavenly Father,
Thank You for showing us who You truly are – full of mercy, love, and truth.
Write Your character on our hearts, LORD. Let us not just know Your name, but live it.
Help us bear the fruits of Your Spirit; not by our strength, but by Your grace.
Shape us to reflect You, day by day, until we are fully Yours.
In Jesus Christ’s name we pray, Amen.
இன்றைய நாளின் வசனம்
பொற்கன்று சம்பவத்திற்குப் பிறகு, தேவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையேயான உடன்படிக்கை முறிந்துவிட்டது. ஆனால் இக்கதை நியாயத்தீர்ப்பில் முடிவடையவில்லை. அது மீட்பை நோக்கி நகர்ந்தது. தேவன், தனது கருணையில், மோசேயை மீண்டும் மலையிற்கு அழைத்தார். இம்முறை, அவர் சொன்னார், “முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்.”
ஆகவே, மோசே அப்படியே செய்தார். அதிகாலையில், அவர் சீனாய் மலையில் ஏறினார்; கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, நம்பிக்கையைச் சுமந்து – தன் வாக்குத்தத்தங்களைப் புதுப்பிக்கத் தயாராக இருந்த தேவனைச் சந்திக்க.
பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி, மோசேயின் அருகில் நின்றார். அடுத்து நடந்தது வேதாகமம் முழுவதும் மிக அழகான தருணங்களில் ஒன்றாகும். தேவன் தனது சொந்த நாமத்தை “யாவே” என்று அறிவித்தார். இடியுடன் அல்ல. அக்கினியுடன் அல்ல. ஆனால் தன் குணாதிசயத்துடன்.
அவர் சொன்னார்:
“கர்த்தர், கர்த்தர்,
இவர் வெறும் சட்டத்தின் தேவன் மட்டுமல்ல. இவர் அன்பின் தேவன். இவர் கருணையில் மகிழ்ச்சியடையும் தேவன். அவர் உடன்படிக்கையின் பின்னால் இருக்கும் இருதயத்தை வெளிப்படுத்தினார்; கல்லில் செதுக்கப்பட்ட விதிகள் அல்ல, மாறாக கிருபையில் செதுக்கப்பட்ட உறவு.
ஆனால் தேவன் கருணையை அறிவித்த போதிலும், நீதியை கைவிடவில்லை.
“குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடமாட்டேன்,” என்று அவர் சொன்னார்.
“பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்” என்று கூறினார்.
இதன் அர்த்தம், தேவன் குழந்தைகளைத் தங்கள் பெற்றோரின் பாவங்களுக்காக கண்மூடித்தனமாக தண்டிக்கிறார் என்பதா. இல்லை. அவர் நியாயமானவர். நீதியுள்ளவராக இருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால்; குடும்பங்கள் பாவத்தில் நடக்கும்போது, அவர்களின் குழந்தைகளும் பெரும்பாலும் அதைப் பின்பற்றுகின்றன. இந்த சுழற்சி தொடர்கிறது. அந்த சுழற்சியே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறது.
ஆனால் ஒரு குழந்தை தன் பெற்றோரின் தவறான வழியை விட்டு விலகி, தேவனுடன் நடந்தால் – அங்கே தண்டனைக்குப் பதிலாக ஆசீர்வாதம் உண்டு. எசேக்கியா ராஜாவை நினைத்துப் பாருங்கள். அவரது தகப்பனாகிய ஆகாஸ் தேவனுக்கு எதிராக கலகம் செய்தான், ஆனால் எசேக்கியா நீதியைத் தேர்ந்தெடுத்தார். தேவன் அவரை மகிமைப்படுத்தினார்.
இந்த அதிகாரத்தில், தேவனின் இரு பக்கங்களைக் காண்கிறோம்; கருணையும் சத்தியமும். இரக்கமும் நீதியும். மன்னிப்பு, ஆனால் பொறுப்பும் கூட.
மோசே தாழ்ந்து வணங்கி, மீண்டும் கூப்பிட்டார், “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்… எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும்.”
கர்த்தர் பதிலளித்தார் – கோபத்துடன் அல்ல, ஒரு புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கையுடன்.
அவர்தான் நாம் ஆராதிக்கும் தேவன். நம்மை மீண்டும் அழைக்கும் தேவன், தன் இருதயத்தை வெளிப்படுத்தும் தேவன், இரண்டாவது வாய்ப்புகளைத் தரும் தேவன் – நாம் அதற்கு தகுதியுள்ளவர்களாக இருப்பதால் அல்ல, மாறாக அவர் யார் என்பதற்காக.
நமக்கானப் பாடம்
பரிசுத்த ஆவியின் ஒன்பது கனிகள் – பத்து அல்ல, எட்டு அல்ல – ஆனால் சரியாக ஒன்பது என்று வேதாகமம் ஏன் பேசுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். இது ஒரு சீரற்ற பட்டியல் அல்ல. நாம் யாத்திராகமம் 34ஐ கூர்ந்து பார்க்கும்போது, தேவன் தன்னை மோசேக்கு வெளிப்படுத்தியபோது, தனது சொந்த குணாதிசயங்களை ஒன்பது பண்புகளை விவரித்தார் – இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன், ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர், அக்கிரமத்தை மன்னிப்பவர், மீறுதலை மன்னிப்பவர், பாவத்தை மன்னிப்பவர்.
இது நமக்கு என்ன சொல்கிறது?
இது நமக்குச் சொல்கிறது: நாம் அவருடைய ஆவியினால் பிறந்தால், நாம் அவருடைய சாயலை பிரதிபலிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் போல இருப்பது போல, நாம், கடவுளின் குழந்தைகள், அவருடைய சாயலாக இருக்க வேண்டும்; மாம்சத்தில் அல்ல, ஆனால் சுபாவத்தில்.
“நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.” – 1 பேதுரு 1:16
ஆவிக்கேற்றபடி நடந்து… ஆவியின் கனிகளைக் கொடுங்கள்.
இது சிறப்பாக நடந்து கொள்வதற்கான அழைப்பு மட்டுமல்ல. இது மாற்றப்படுவதற்கான அழைப்பு – பிதாவின் வெளிப்படையான சாயலாகிய கிறிஸ்துவால் நிரப்பப்பட்ட அதே ஆவியால் நிரப்பப்படுவதற்கான அழைப்பு.
யாத்திராகமம் 34ல், தேவன் கருணையும் நீதியும் உள்ளவர் என்பதை நாம் காண்கிறோம். அவர் மன்னிக்கிறார், ஆனால் குற்றவாளிகளைக் கணக்கும் கேட்கிறார். இதுதான் நமது பாடம்: கிருபை என்பது பாவம் செய்ய அனுமதி அல்ல; அது பரிசுத்தமாக மாறுவதற்கான வல்லமை.
மோசேயிடம் புதிய பலகைகளை செதுக்கி மலையில் கொண்டுவரச் சொன்னபோது, கடவுள் நமக்கு ஒரு காட்சியைக் காட்டினார்: பழைய உடன்படிக்கை முறிந்துவிட்டது, ஆனால் தேவன் தன் நியாயப்பிரமாணங்களை மீண்டும் எழுதத் தயாராக இருந்தார் – கல்லில் மட்டுமல்ல, நம் இருதயங்களிலும்.
“நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.” 2 கொரிந்தியர் 3:3
ஆகையால், இன்று நாமே நம்மைக் கேட்டுக்கொள்வோம்:
ஏனென்றால் புதிய சிருஷ்டியின் வாழ்க்கை என்பது இரட்சிக்கப்படுவது மட்டுமல்ல; அது மாற்றப்படுவதைப் பற்றியது. கிறிஸ்துவைப் போல இருக்க மாற்றப்படுவது. அவர் நடந்ததைப் போல நடப்பது. அவர் மன்னித்ததைப் போல மன்னிப்பது. அவர் அன்பு காட்டியதைப் போல அன்பு காட்டுவது.
நாம் ஜீவிக்கும் கற்களாக, ஜீவிக்கும் கடவுளின் சுபாவமாக மாறுவோம் – அவருடைய குழந்தைகளாக பிரகாசிப்போம், அவரைச் சார்ந்தவர்கள் என்பதற்கான சான்றாக கனிகளைத் தருவோம்.
ஜெபம்
பரலோக பிதாவே,
நீர் உண்மையிலேயே யார் என்பதை எங்களுக்குக் காட்டியதற்கு நன்றி – இரக்கம், அன்பு, சத்தியத்தால் நிறைந்தவர். உம் குணாதிசயங்களை எங்கள் இருதயங்களில் எழுதும், ஆண்டவரே. உம் நாமத்தை அறிவது மட்டுமல்ல, அதன்படி வாழவும் உதவுங்கள். உமது ஆவியின் கனிகளைத் தரும்படி உதவுங்கள்; எங்கள் பலத்தால் அல்ல, நாங்கள் முழுமையாக உம்முடையவர்களாக ஆகும் வரை, நாளுக்கு நாள் உம்மைப் பிரதிபலிக்க எங்களை உருவாக்கும்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமென்.
© 2023 The Millennium Post